பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகிகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பிரபாஸ் தற்போது ‘சலார்’ மற்றும் ‘கல்கி 2898 AD’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த இரண்டு படங்களும் உருவாகி வருகிறது.
இந்நிலையில் பிரபாஸ் இயக்குனர் மாருதி இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். ராஜா டீலக்ஸ் என்று இந்த படத்திற்கு தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படம் காமெடி ஹாரர் கதை களத்தில் உருவாகி வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் நிதி அகர்வால் மற்றும் மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.