spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரபாஸின் 'சலார்' பட ரிலீஸ் தேதி மாற்றப்படுகிறதா?

பிரபாஸின் ‘சலார்’ பட ரிலீஸ் தேதி மாற்றப்படுகிறதா?

-

- Advertisement -

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சலார் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

பிரபாஸ் தற்போது ப்ராஜெக்ட் கே திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே சமயம் சலார் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்குகிறார். ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது. ரவி பசூர் இதற்கு இசை அமைக்கிறார். இதில் பிரபாஸுடன் இணைந்து ஸ்ருதிஹாசன், பிரித்விராஜ், ஜெகதீபாபு மற்றும் பலர் நடிக்கின்றனர்.

we-r-hiring

சலார் PART 1 CEASE FIRE என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பாக வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து படத்தின் டிரைலர் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கிராபிக்ஸ் பணிகளில் தாமதம் ஏற்படுவதால் இப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி வெளியாக இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிகின்றன. தீபாவளியை முன்னிட்டு கார்த்தியின் ஜப்பான், சிவகார்த்திகேயனின் அயலான் உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கிறது. தற்போது சலார் திரைப்படமும் தீபாவளி ரேசில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.

MUST READ