Homeசெய்திகள்சினிமாசலார் திரைப்பட வெற்றி... நடிகர் பிரபாஸ் ரசிகர்களுக்கு நன்றி...

சலார் திரைப்பட வெற்றி… நடிகர் பிரபாஸ் ரசிகர்களுக்கு நன்றி…

-

- Advertisement -
சலார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தில் நாயகனாக நடித்துள்ள பிரபாஸ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டிருக்கிறார்.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நாயகனாக நடித்த சலார் படம் பத்து நாட்களுக்கு முன்பாக பான் இந்தியா படமாக திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்க, பிருத்விராஜ், ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி, பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஆனால், தெலுங்கு மாநிலங்களில் மட்டுமே இத்திரைப்படம் பலத்த வரவேற்பை பெற்றது. தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் வட மாநிலங்களில் எதிர்பார்த்த அளவு வரவேற்பும், வசூலும் கிடைக்கவில்லை. இருப்பினும், உலகம் முழுவதும் 625 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

படத்திற்கு கிடைத்த வரவேற்பு குறித்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, கான்சார் தலைவிதியை நான் தீர்மானிக்கும்போது, நீங்கள் அனைவரும் அமர்ந்து புத்தாண்டை அருமையாக கொண்டாடுங்கள் டார்லிங்க்ஸ். சலார் தி சீஸ்பயர் படத்தை சொந்தமாக்கி அதை பெரிய வெற்றி பெற வைத்ததற்கு நன்றி எனத் தெரிவித்து அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தெலுங்கு பகுதிகள் தவிர பிற மாநிலங்களில் வசூல் அதிகம் இல்லையென்றாலும் வெளிநாடுகளில் சலார் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் 600 கோடி வசூலைக் கடந்துள்ளதாகச் சொல்கிறார்கள். படத்திற்கான லாபம் எந்த அளவில் இருக்கும் என்ற தகவல் இனிமேல்தான் வெளியாகும்.

MUST READ