ஜாலியோ ஜிம்கானா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் பிரபுதேவா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே சமயம் இவரது நடிப்பில் உருவாகி இருந்த பேட்ட ராப் எனும் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் திரையிடப்பட்டது. மேலும் சிங்காநல்லூர் சிக்னல், மூன் வாக் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார் பிரபுதேவா. இதற்கிடையில் இவர் ஜாலியோ ஜிம்கானா எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தில் பிரபுதேவா உடன் இணைந்து மடோனா செபஸ்டியன், அபிராமி, யாஷிகா ஆனந்த், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஒய் ஜி மகேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை சக்தி சிதம்பரம் இயக்கியுள்ள நிலையில் அஸ்வின் விநாயகமூர்த்தி இதற்கு இசையமைத்திருக்கிறார். கணேஷ் சந்திரா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் டிரைலரும் வெளியிடப்பட்டது.
அதை தொடர்ந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி வந்தது. அந்த வகையில் ‘போலீஸ்காரன கட்டிக்கிட்டா’ எனும் பாடலை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வந்தனர். இருப்பினும் இந்த படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜாலியோ ஜிம்கானா திரைப்படம் வருகின்ற நவம்பர் 22 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.