spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரபுதேவா நடிக்கும் 'ஜாலியோ ஜிம்கானா'.... கலக்கலான ட்ரெய்லர் வெளியீடு!

பிரபுதேவா நடிக்கும் ‘ஜாலியோ ஜிம்கானா’…. கலக்கலான ட்ரெய்லர் வெளியீடு!

-

- Advertisement -

பிரபுதேவா நடிப்பில் உருவாகி இருக்கும் ஜாலியோ ஜிம்கானா படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.பிரபுதேவா நடிக்கும் 'ஜாலியோ ஜிம்கானா'.... கலக்கலான ட்ரெய்லர் வெளியீடு!

நடிகர் பிரபுதேவா தற்போது விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் தி கோட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் நாளை (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அதே சமயம் சிங்கநல்லூர் சிக்னல், பேட்ட ராப், மூன் வாக் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார் பிரபுதேவா. இதற்கிடையில் இவர் ஜாலியோ ஜிம்கானா எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தை சக்தி சிதம்பரம் இயக்கியிருக்கிறார். இதில் பிரபுதேவாவுடன் இணைந்து மடோனா செபாஸ்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் அபிராமி, யோகி பாபு, யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி, ஒய் ஜி மகேந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அஸ்வின் விநாயக மூர்த்தி இசையமைக்க கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார்.

we-r-hiring

படத்தினை ட்ரான்ஸ் இந்தியா மீடியா & என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படமானது விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் காமெடி கலந்த கதை களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ