பிரபுதேவா நடிக்கும் பேட்ட ராப் படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.நடிகர் பிரபுதேவா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அந்த வகையில் இவர் விஜயின் கோட், மூன் வாக், சிங்கநல்லூர் சிக்னல் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ள நிலையில் பேட்ட ராப் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக வேதிகா நடித்திருக்கிறார். மேலும் விவேக் பிரசன்னா, ரமேஷ் திலக், பகவதி பெருமாள் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை எஸ்.ஜே சினு இயக்க ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜித்து தாமோதரன் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். டி இமான் இதற்கு இசையமைத்திருக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதன் பின்னர் இந்த படத்தின் டீசரும் இதன் முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் ஆராத்தி ஆராத்தி எனும் இரண்டாவது பாடல் நாளை (ஜூலை 17) மாலை 4 மணி அளவில் வெளியாகும் என்று பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த படமானது விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -