Homeசெய்திகள்சினிமாபிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள வுல்ஃப் படத்தின் டீசர் வெளியானது!

பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள வுல்ஃப் படத்தின் டீசர் வெளியானது!

-

பிரபுதேவாவின் வுல்ஃப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
பிரபுதேவா தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் வுல்ஃப் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இது பிரபுதேவாவின் 60 ஆவது படமாகும்.

இந்த படத்தில் அஞ்சு குரியான், லட்சுமி ராய் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் அனுசுயா பரத்வாஜ், பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்தேஷ் ப்ரடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சந்தேஷ் நாகராஜ் படத்தை தயாரித்துள்ளர்.இந்த படத்தை வினு வெங்கடேஷ் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு அம்ரீஷ்
இசையமைக்கிறார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் ஒரு சயின்ஸ் பிக்சன் ஹாரர் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசரை பார்க்கும்போது பழங்காலத்தில் நடப்பது போன்றும் தற்போது நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு வித்தியாசமான ஹாரர் கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை கணிக்க முடியாத அளவிற்கு படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். அதற்கு ஏற்றார் போல் பின்னணி இசையும் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த படம் குறித்த ரிலீஸ் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ