Homeசெய்திகள்சினிமாசயின்ஸ் ஃபிக்ஷன் ஹாரர் ஆக்ஷனில் பிரபுதேவா...... டீசர் ரிலீஸ் அப்டேட்!

சயின்ஸ் ஃபிக்ஷன் ஹாரர் ஆக்ஷனில் பிரபுதேவா…… டீசர் ரிலீஸ் அப்டேட்!

-

பிரபுதேவாவின் WOLF படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

பிரபுதேவா சமீபத்தில் பஹீரா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் இப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதைத்தொடர்ந்து பிரபுதேவா WOLF எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் இவருடன் இணைந்து அஞ்சு குரியான், லட்சுமி ராய், அனுசுயா பரத்வாஜ், பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பிரபுதேவாவின் 60 வது படமான இந்த படத்தை வினு வெங்கடேஷ் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தை சந்தோஷ் நாகராஜ் வழங்கும் இந்த படத்திற்கு அம்பரீஷன் இசையமைக்கிறார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார்.
தமிழ் படம் ஒரு ஹாரர் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பாக பணத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் WOLF படத்தின் டீசர் நாளை காலை 11 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்ட அறிவித்துள்ளனர். மேலும் அந்த போஸ்டரில் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் வெளியிடப்படவில்லை. நாளை வெளியாகும் டீசரில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ