பிரபுதேவா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.
நடன இயக்குனராக, இயக்குனராக இந்திய அளவில் பிரபலமான பிரபுதேவா தற்போது முழுவதுமாக நடிப்பில் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் பிரபு தேவா ‘பேட்ட ராப்’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிகை வேதிகா கதாநாயகியாக நடிக்கிறார்.

இசையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தை மலையாள இயக்குனர் எஸ்ஜே நிலன் இயக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தில் பகவதி பெருமாள் ,விவேக் பிரசன்னா, ரமேஷ் திலக், மைம் கோபி, ரியாஸ் கான் உள்ளிட்ட போல நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார்.
பேட்ட ராப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் 15ஆம் தேதி பாண்டிச்சேரியில் துவங்க உள்ளது. இந்தப் படத்தை Blue hill Films நிறுவனம் தயாரிக்க இருக்கின்றனர். சங்கர் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான காதலன் படத்தில் இடம்பெற்ற பாடல் தான் பேட்ட ராப். தற்போது அந்த பாடல் வரியே படத்தின் தலைப்பாக வைத்துள்ளது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.