Homeசெய்திகள்சினிமாபிரபுதேவா நடிக்கும் பேட்டரேப்... நாளை டீசர் வௌியீடு...

பிரபுதேவா நடிக்கும் பேட்டரேப்… நாளை டீசர் வௌியீடு…

-

- Advertisement -
kadalkanni
தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும், நடன இயக்குநராகவும் வலம் வருபவர் பிரபு தேவா. இவரது நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் பஹீரா. வில்லனாக பல கெட்டப்பில் வந்து ரசிகர்களை மிரட்டி எடுத்திருப்பார் பிரபுதேவா. இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து, விஜய் நடிக்கும் 68 வது படத்தில் பிரபுதேவா ஒப்பந்தமாகியுள்ளார். பிரபுதேவா இயக்கத்தில் பல படங்களில் நடித்த விஜய் தற்போது அவருடனே இணைந்து நடித்திருக்கிறார்.
இதையடுத்து சக்தி சிதம்பரம் இயக்கும் புதிய திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். பிரபல மலையாள நடிகை மடோனா செபாஸ்டியன் நடிக்கும் இப்படத்திற்கு ஜாலியோ ஜிம்கானா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் புதியதிரைப்படம் தான் பேட்ட ரேப். படத்தில் நாயகியாக வேதிகா நடித்துள்ளார். மேலும், பாலிவுட் நடிகை சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். புளூ ஹில் பிலிம்ஸ் தயாரிப்பில் இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது.
படத்திற்கு டி இமான் இசை அமைக்கிறார். விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், பேட்ட ரேப் படத்தின் டீசர் நாளை வௌியாகும் என்றும், நடிகர் விஜய் சேதுபதி டீசரை வெளியிடுவார் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

MUST READ