Homeசெய்திகள்சினிமாதனுஷின் 'ராயன்' படத்தில் பிரகாஷ் ராஜ்..... புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

தனுஷின் ‘ராயன்’ படத்தில் பிரகாஷ் ராஜ்….. புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

-

நடிகர் தனுஷ் கடந்த 2017 இல் வெளியான ப. பாண்டி திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தற்போது தனது ஐம்பதாவது திரைப்படத்தையும் தானே இயக்கி நடித்து முடித்துள்ளார். தனுஷின் 'ராயன்' படத்தில் பிரகாஷ் ராஜ்..... புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!இந்த படத்திற்கு ராயன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஏ ஆர் ரகுமானின் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகவே இருந்து வருகிறது. தனுஷின் 'ராயன்' படத்தில் பிரகாஷ் ராஜ்..... புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!இந்த படத்தை பட குழுவினர் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், பட குழுவினர் தொடர்ந்து அடுத்தடுத்த போஸ்டர்களை வெளியிட்டு படத்தில் நடித்துள்ள நடிகர்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே எஸ் ஜே சூர்யா, செல்வராகவன் ஆகியோரின் போஸ்டர்கள் வெளியான நிலையில் தற்போது நடிகர் பிரகாஷ் ராஜின் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இதன் மூலம் நடிகர் பிரகாஷ் ராஜ் ராயன் படத்தில் நடித்துள்ளது தெரிய வந்திருக்கிறது. இனி வரும் நாட்களிலும் படத்தின் மற்ற நடிகர்களின் போஸ்டர்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரகாஷ் ராஜ் ஏற்கனவே தனுஷ் உடன் இணைந்து திருவிளையாடல் ஆரம்பம், திருச்சிற்றம்பலம், வேங்கை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ