பிரபல நடிகராகவும் அரசியல்வாதியாகவும் வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். இவர் கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவு தமிழகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்றுவரையிலும் தமிழ் மக்கள் நீங்கா துயரத்தில் இருந்து வருகின்றனர். அந்த அளவிற்கு சினிமா, அரசியலை தாண்டி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் விஜயகாந்த். விஜயகாந்தின் மறைவிற்குப் பிறகு விஜயகாந்தை நினைவுபடுத்தும் விதமாக பல படங்கள் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. அதன்படி ஏற்கனவே ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் லப்பர் பந்து திரைப்படத்தில் விஜயகாந்தை நினைவூட்டும் வகையிலான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக படத்தின் இயக்குனர் தெரிவித்திருந்தார். அதே சமயம் ஊமை விழிகள் 2 திரைப்படமும் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் விஜய், வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் கோட் படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் விஜயகாந்தை காண்பிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் கசிந்திருந்தது.
தற்போது இதனை உறுதி செய்யும் விதமாக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “வெங்கட் பிரபு பலமுறை என்னை சந்தித்து விஜயகாந்தின் ஏஐ பற்றி பேசியுள்ளார். சிறுவயதிலிருந்தே விஜய் மீது பாசம் கொண்டவர் விஜயகாந்த். அதனால் விஜய்க்கும் பெற்ற பிரபுக்கும் என்னால் நோ சொல்ல முடியவில்லை. விஜயகாந்த் இருந்திருந்தால் இதற்கு நோ சொல்லியிருக்க மாட்டார். அவரிடத்தில் இருந்து அவர் என்ன சொல்லி இருப்பாரோ அதை தான் நான் சொல்லி இருக்கிறேன்” என்று கோட் படத்தில் விஜயகாந்தின் ஏஐ குறித்து பேசியுள்ளார்.
- Advertisement -