- Advertisement -
சலார் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

இந்திய சினிமாவின் இரு பெரும் நட்சத்திரங்களாக உயர்ந்தவர்கள் பிரசாந்த் நீல் மற்றும் யாஷ். பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம், மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. கேஜிஎஃப் இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றி பெற்றன. இதன் வெற்றிக்கு பிறகு, ஹம்போலா நிறுவனம் தயாரிப்பில் உருவான மற்றொரு திரைப்படம் சலார். பிரசாந்த் நீல் இயக்கி இருக்கும் இத்திரைப்படத்தில், பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஸ்ருதி ஹாசன் நாயகியாகவும், ஜெகபதிபாபு, பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்னர்.


தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் இத்திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. கலவையான விமர்சனங்களை சலார் திரைப்படம் பெற்று வந்தாலும், வசூல் ரீதியாக படம் பணத்தை குவித்தது. வெளியான அனைத்து இடங்களிலும் கோடிக்கணக்கில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. முதல் பாகம் சில எதிர்மறை விமர்சனங்களை பெற்றது. முழுக்கதையையும் வெளிப்படுத்தவில்லை என்றும், சிலர் கதையே புரியவில்லை என்றும் விமர்சனம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இரண்டாம்பாகத்தில் தான் மொத்த கதையும் இருப்பதாக இயக்குநர் பிரசாந்த் நீல் விளக்கம் அளித்திருந்தார்.



