spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகால்பந்து கிளப்பின் பக்கத்தில் இடம்பிடித்த 'நான் ரெடி' பாடல்

கால்பந்து கிளப்பின் பக்கத்தில் இடம்பிடித்த ‘நான் ரெடி’ பாடல்

-

- Advertisement -
பிரபல ப்ரீமியர் லீக் கால்பந்து அணியான டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியின் பேஸ்புக் பக்கத்தில் லியோ நான் ரெடி பாடல் இடம்பெற்றுள்ளது.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் லியோ. இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்தது. படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இத்திரைப்படம் கடந்த அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாக மட்டுமன்றி வசூல் ரீதியாகவும் வேட்டை ஆடியது.
படத்தில் அனிருத் இசையில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் வரவேற்பை பெற்றது. பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்த நான் ரெடிதான் பாடலும் இதில் அடங்கும். விஜய் பாடிய இப்பாடல் 10 கோடி பார்வையாளர்களையும் தாண்டி பெரும் வரவேற்பை பெற்றது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பாடலுக்கு அடிமை என்றே சொல்லலாம்.

இந்நிலையில் ‘நா ரெடி தான்’ பாடல் உலகம் முழுவதும் பிரபலம் ஆகியுள்ளது. அதாவது பிரீமியர் லீக் கால்பந்தில் பிரபல கால்பந்து அணியாக திகழும் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியின் சமூக வலைதள பக்கத்தில், இடம் பெற்றுள்ளது.

MUST READ