Homeசெய்திகள்சினிமாபத்து தல இயக்குநருடன் பிரபல தயாரிப்பு நிறுவனம் கூட்டணி... அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ... பத்து தல இயக்குநருடன் பிரபல தயாரிப்பு நிறுவனம் கூட்டணி… அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ…
- Advertisement -
பிரபல இயக்குநர் ஒபேலி கிருஷ்ணா, புதிய படத்திற்காக பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.

தமிழில் ஓரிரு திரைப்படங்கள் இயக்கினாலும், முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ஒபேலி கிருஷ்ணா. இவர் 2006-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். இத்திரைப்படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா நடித்திருந்தனர். இத்திரைப்படம் மக்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன. இன்றுவரை குந்தவை மற்றும் கௌதம் கதாபாத்திரம் கோலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத வேடங்கள் ஆகும்.

சில்லுனு ஒரு காதல் படத்தின் வெற்றிக்கு பிறகு நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்ட கிருஷ்ணா ஆரியை வைத்து நெடுஞ்சாலை திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படமும் வரவேற்பை பெற்றது. பின்னர், மீண்டும் ஒரு இடைவௌிக்கு பிறகு சிம்புவை வைத்து பத்து தல திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இது, கன்னடத்தில் வெளியான மஃப்டி படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.

இந்நிலையில், மீண்டும் ஒரு புதிய படத்தை ஒபேலி கிருஷ்ணா இயக்க உள்ளார். இத்திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் நாயகன், நாயகி குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.