- Advertisement -
பிருத்விராஜ் மற்றும் கஜோல் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.

மலையாள திரையுலகின் முன்னணி ஸ்டாராக வலம் வருபவர் பிருத்விராஜ் சுகுமாறன். இவர் மலையாள நடிகராக இருந்தாலும், தமிழில் கனா கண்டேன், பாரிஜாதம், சத்தம்போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை, அபியும் நானும், நினைத்தாலே இனிக்கும் உள்பட பல திரைப்படங்கள் நடித்திருக்கிறார். இது தவிர இந்தியிலும் அவர் 3 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இறுதியாக பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


நடிப்பு மட்டுமன்றி இயக்கத்திலும் பிருத்விராஜ் ஆர்வம் காட்டி வருகிறார். லூசிபர் என்ற படத்தின் மூலம் அவர் இயக்குநராக அறிமுகம் ஆனார். தற்போது அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லூசிபர் 2-ம் பாகத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிருத்விராஜ் இந்தியில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்



