நடிகர் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் சுனில், எஸ்.ஜே சூர்யா,செல்வராகவன், ரித்து வர்மா, ஒய் ஜி மகேந்திரன், அபிநயா மற்றும் பலர் நடித்து வருகின்றனர். மினி ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இதைத்தொடர்ந்து விஷால் தனது 34 ஆவது படத்தை இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். தாமிரபரணி, பூஜை உள்ளிட்ட படங்களை அடுத்து விஷால் – ஹரி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டூடியோ மற்றும் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க இருக்கிறது.

தேவி ஸ்ரீ பிரசாத், ஆறு, சிங்கம், சிங்கம் 2, வேங்கை, சாமி 2 உள்ளிட்ட படங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் ஹரியுடன் இணைந்து இப்படத்தில் பணியாற்ற உள்ளார்.
மேலும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. பிரியா பவானி சங்கருக்கு சமீப காலமாக தொடர்ந்து பல பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல் இவர் ஏற்கனவே ஹரி இயக்கத்தில் யானை படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இதே கூட்டணி விஷாலின் 34 ஆவது படத்தில் இணையவுள்ளது.