நடிகை ப்ரியா பவானி ஷங்கர் தனது அழகு பற்றி நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார்.
“அடடா, இந்த வீடியோ பாக்கும் போது பழசு எல்லாம் நியாபகம் வருது. இந்தக் வீடியோவ தேடி கண்டுபுடிச்சு அடுத்தவருக்கு உண்மையிலே ரொம்ப நன்றி. இத்தனை வருசத்துல நான் நிறைய சுவாரசியமான விஷயங்கள கடந்து வந்தத என்னால பார்க்க முடியுது.


அப்படியான சில விஷயங்கள்..
1) பசங்க, பொண்ணுங்க எல்லாருமே நம்மள கொடுமைப்படுத்துவாங்க. நம்மளோட தோற்றம் மற்றும் உருவத்த வச்சு தாழ்த்தி பேசுவாங்க. நீங்க என்னவ இருக்கீங்க, என்னவா ஆகப்போறீங்கனு அவங்க முடிவு பண்ண நீங்க அனுமதிக்காதிங்க.
இதுதான் அழகுன்னு ஒரு வரையறை கிடையவே கிடையாது. சாதாரண மனுஷங்களால(நீங்கள் இந்த வீடியோவில் பார்ப்பது போல.) நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு ஒரு நடிகர் எவ்வளவோ காசு செலவழித்து அவங்கள அழகா காட்டுகிறாங்க.
View this post on Instagram
அதனால நீங்க பொலிவா இல்லனோ, உங்களுக்கு சிறப்பான தோல் இல்லனோ உங்களுக்கு சிறப்பான உருவம் இல்லனோ நீங்க கவலைப்பட தேவையில்லை. இந்த இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்த்து தப்பா முடிவு எடுக்காதீங்க. இன்னைக்கு என்னைய தயார் படுத்துறதுக்கு 10 பேர் கொண்ட டீம் இருக்காங்க. ஆனா அதுதான் அழகுக்கு வரையறை கிடையாது. அது என்னோட லட்சியமும் கிடையாது. இது என்னோட வேலை அவ்வளவுதான். அதனால இதை நினைச்சு உங்களை நீங்களே வருத்திக்காம உங்களோட வாழ்க்கைய முழுக்க அனுபவிச்சு வாழுங்க (வீடியோவில் பார்க்கும் பெண் போல)
காசு வந்தா காக்கா கூட கலர் ஆயிடும் சில பேர் சொல்லுவாங்க. காசு தானா தேடி வீட்டுக்கு வராது. நீங்கதான் இந்த உலகத்துல இறங்கி அடிச்சு, போராடி நமக்கு என்ன தேவையோ அதை உருவாக்கணும். அப்படி அது உங்களுக்கு கிடைக்கும் போது அதை வச்சு என்ன பண்ணனும் அப்படிங்கறத நீங்க முடிவு எடுக்கலாம். கலராகணும்னு ஒரு கட்டாயமும் இல்லை.

ராஜவேல் உனக்கு என் அன்பு. இப்ப என்னைய எப்படி பாக்குறியோ அப்பவும் அப்படி தான் பாத்த. அதனால பசங்க/ பொண்ணுங்களே இந்த மாதிரியான வாழ்க்கைக்கு கரெக்ட்டா இருக்குற ஒரு நபரை பாத்தீங்கன்னா அவங்கள கட்டியா பிடிச்சுக்கோங்க. இந்த அழகான நினைவுக்கு மறுபடியும் ஒரு தடவை நன்றி சொல்லிக்கிறேன். அனைவருக்கும் எனது அளவு கடந்த அன்பு.” என்று தெரிவித்துள்ளார்.


