நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியங்கா மோகன் இருவரும் ஒன்றாக சாப்பிடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்தியாவின் ஸ்டார் நடிகையாக உருவெடுத்துள்ளார். தற்போது பெரிய ஸ்டார் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இதற்கிடையில் ப்ரியங்கா அருள் மோகனும் ஸ்டார் நடிகையாக வளர்ந்து வருகிறார். தற்போது தனுஷ் உடன் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து தெலுங்கில் பவன் கல்யாண் உடன் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ப்ரியங்கா மோகன்.
இந்நிலையில் ஒரு சிறிய ஹோட்டல் ஒன்றில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ப்ரியங்கா மோகன் இருவரும் விதவிதமான பல தோசைகளை அடுக்கி வைத்து சாப்பிடும் புகைப்படம் இணையத்தில் ஆகி வருகிறது.
கீர்த்தி, ப்ரியங்கா இருவரும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே!