விஜயின் 67வது படமான லியோ திரைப்படம் மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலும் உருவாகியுள்ளது. வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வருவதற்கு இப்படம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.
இந்த படத்தின் ரிலீஸுக்கு பிறகு விஜய் தனது 68 வது படத்தை வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இதனை தயாரிக்க உள்ளது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்க உள்ளார்.
தளபதி 68 படம் குறித்த மற்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை. இருந்த போதிலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் வகையில் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன்படி சமீபத்தில் விஜய் தளபதி 68 இல் இரட்டை படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.
மேலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய், ஜோதிகா கூட்டணி இந்த படத்தில் இணை இருப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது புதிய அப்டேட்டாக டாக்டர், டான் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரியங்கா மோகன் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதாவது விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதால் ஒரு விஜய்க்கு ஜோதிகா ஜோடியாகவும் மற்றொரு விஜய்க்கு பிரியங்கா மோகன் ஜோடியாகவும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

வெங்கட் பிரபுவும் சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இதுவரை இணையாத ஹீரோயின் தான் தளபதி 68 இல் நடிக்கப் போகிறார் என்று கூறியிருந்தார். அதனால் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் பிரியங்கா மோகன் தளபதி 68 இல் நடிக்க வாய்ப்புள்ளதாக பலரும் தன் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரியங்கா மோகன் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


