spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரியங்கா மோகனிடம் ரசிகர் கேட்ட வினோத கேள்வி... பதில் அளித்த பிரியங்கா...

பிரியங்கா மோகனிடம் ரசிகர் கேட்ட வினோத கேள்வி… பதில் அளித்த பிரியங்கா…

-

- Advertisement -
தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவர் பிரியங்கா மோகன். தமிழ், தெலுங்கு என மாறி மாறி அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியா நடித்து வருகிறார். தெலுங்கில் கேங்ஸ்டர் என்ற திரைப்படத்தின் மூலம் அவர் பிரபலமானார். நானியுடன் சேர்ந்து அவர் நடித்த அத்திரைப்படம் பெரிய ஹிட் அடித்தது. தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

 

we-r-hiring
இதைத் தொடர்ந்து தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமானார் பிரியங்கா மோகன். அதைத் தொடர்ந்து, சூர்யாவுடன் சேர்ந்து எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருப்பார். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இரண்டு திரைப்படங்களின் மூலமும் ரசிகர்களை கவர்ந்தவர் பிரியங்கா மோகன். தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக அவர் நடித்துள்ளார். இப்படத்தில் இதுவரை இல்லாத அளவு மாறுபட்ட வேடத்தில் அவர் நடித்து இருக்கிறார். இது தவிர ஜெயம்ரவி நடிக்கும் பிரதர் படத்திலும் அவர் நடித்து வருகிறார்

இந்நிலையில், நடிகை பிரியங்கா மோகன் ரசிகர்களின் கேள்வி பதில் நேரத்தில், ரசிகர் ஒருவர் பிரியங்காவின் விரல் நகங்களை காட்டு கேட்டிருக்கிறார். அதையும், பிரியங்கா புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். ரசிகரின் இந்த வினோத கேள்வியும், புகைப்படத்தையும் வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

MUST READ