spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரீ ரிலீஸ் பட்டியலில் இணைந்த ரஜினிகாந்தின் படையப்பா

ரீ ரிலீஸ் பட்டியலில் இணைந்த ரஜினிகாந்தின் படையப்பா

-

- Advertisement -
ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படம் திரையரங்குகளில் ரீ ரிலீஸாகவுள்ளது.

கடந்த 1999-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி கோலிவுட்டையே ஒரு கலக்கு கலக்கிய திரைப்படம் என்றால் அது படையப்பா தான். ரஜினிகாந்தின் திரைவாழ்வில் மட்டுமன்றி, கோலிவுட் திரையுலகிலும் ஒரு மைல்கல்லாக அமைந்தது படையப்பா திரைப்படம். கே.எஸ்.ரவிக்குமார் இத்திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இதற்கு இசை அமைத்திருந்தார்.

we-r-hiring
இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, சிவாஜிகணேசன், சித்தாரா, மணிவண்ணன், செந்தில், நாசர், அப்பாஸ், பிரீத்தா விஜயகுமார், லட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். படத்தில் ரஜினியின் ஸ்டைலும், மாஸூம் ரசிகர்கள் மத்தியில் கைத்தட்டல்களை பெற்றுக் கொடுத்தன. அதேசமயம், படத்தில் ரஜினிக்கு ஈடாக வில்லியாக நடித்து மிரட்டியிருப்பார் ரம்யா கிருஷ்ணன். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு ரம்யா கிருஷ்ணனின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது. கோலிவுட்டின் முன்னணி நாயகியாக உருவெடுத்தார்.

ரம்யா கிருஷ்ணன் ஏற்று நடிக்க நீலாம்பரி கதாபாத்திரம், ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகையும் மிரட்டி எடுத்தது. படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன. இன்று வரை ஹிட் என்றே சொல்லலாம். படையப்பா திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்த நிலையில், இத்திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் தேனப்பன், ரஜினிகாந்திடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

MUST READ