பிரபாஸின் ப்ராஜெக்ட் கே ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
பிரபாஸ், கமல்ஹாசன் கூட்டணியில் ப்ராஜெக்ட் கே திரைப்படம் உருவாகி வருகிறது. இந்திய திரை உலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் பான் இந்திய அளவில் உருவாகி வரும் படங்களில் ப்ராஜெக்ட் கே திரைப்படம் முக்கியமான ஒன்றாகும். இந்த படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதாணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
வை ஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்குகிறார். மிகப்பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகி வரும் இந்த படம் டைம் ட்ராவல்- சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் ப்ராஜெக்ட் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
அதே சமயம் இப்படத்தின் முன்னோட்ட வீடியோவை நாளை அமெரிக்காவில் பிரம்மாண்டமாக நடைபெறும் San Diego comic-con நிகழ்ச்சியில்
கமல்ஹாசன், பிரபாஸ், மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் இணைந்து வெளியிட இருக்கிறார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த ஜூலை 17ஆம் நாளில் தீபிகா படுகோனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் எதிர்பாராத விதமாக வெளியிட்டிருந்தனர்.இந்நிலையில் தற்போது பிரபாஸின் ப்ராஜெக்ட் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரின் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது.