spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'புஷ்பா 2 ரீலோடட்' பதிப்பின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!

‘புஷ்பா 2 ரீலோடட்’ பதிப்பின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!

-

- Advertisement -

புஷ்பா 2 ரீலோடட் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.'புஷ்பா 2 ரீலோடட்' பதிப்பின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் புஷ்பா 2 எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை சுகுமார் இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சுமார் ரூ. 1800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. 'புஷ்பா 2 ரீலோடட்' பதிப்பின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!இந்நிலையில் இந்த படம் புஷ்பா 2 ரீலோடட் என்ற பெயரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி மீண்டும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது 3 மணி 30 நிமிட நீளமுள்ள காட்சிகள் கொண்ட புஷ்பா 2 – தீ ரூல் படமானது கூடுதலாக 20 நிமிட காட்சிகள் சேர்க்கப்பட்டு புஷ்பா 2 ரீலோடட் என்ற தலைப்பில் 3 மணி 40 நிமிடங்கள் கொண்ட பதிப்பாக வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், புஷ்பா 2 ரீலோடட் பதிப்பு ஒரு சில தொழில்நுட்ப காரணங்களினால் ஜனவரி 11ஆம் தேதியில் இருந்து ஜனவரி 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'புஷ்பா 2 ரீலோடட்' பதிப்பின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!இந்த தகவல் ரசிகர்களுக்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்தினாலும் இன்னும் சில நாட்களில் புஷ்பா 2 படத்தின் 20 நிமிட கூடுதல் காட்சிகளை காண ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோவும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ