- Advertisement -
பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைதாகி சிறைக்கு சென்ற புஷ்பா பட நடிகர் ஜெகதீஸ் பிரதாப் பண்டாரியை படக்குழுவினர் ஜாமீனில் எடுத்துள்ளனர்.
கடந்த 2021-ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா கூட்டணியில் வெளியான இந்த படம் தெலுங்கு , கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளிலும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ல் வெளியாக இருக்கிறது.
