spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபுஷ்பா 2 பட உரிமையை கைப்பற்றிய பிரபல ஓடிடி நிறுவனம்

புஷ்பா 2 பட உரிமையை கைப்பற்றிய பிரபல ஓடிடி நிறுவனம்

-

- Advertisement -
அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் 2-ம் பாக உரிமையை பட வெளியீட்டுக்கு முன்பே பிரபல ஓடிடி நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராகவும், தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் கொண்டிருப்பவர் நடிகர் அல்லு அர்ஜூன். வெறும் கமர்ஷியல் நடிகராக இருந்த அல்லு அர்ஜூனின் மார்க்கெட் உயர முக்கிய காரணமாக அமைந்த திரைப்படம் அலவைக்குந்தபுரமுலோ. இத்திரைப்படத்தின் வெற்றி அல்லு அர்ஜூனின் மார்க்கெட்டை டோலிவுட்டில் உச்சத்திற்கு கொண்டு சென்றது. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு, அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா தி ரைஸ்.

we-r-hiring
இப்படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தான நடித்திருப்பார். சுனில், ஃபகத் பாசில், பிரசாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்தித்தில் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசை அமைத்திருந்தார். இத்திரைப்படத்தை சுகுமார் இயக்கினார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதோடு சுமார் நூறு கோடி ரூபாய் வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகவும் அமைந்தது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது புஷ்பா இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த அதே முகங்கள் இதிலும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், புஷ்பா இரண்டாம் பாகத்தின் உரிமையை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

MUST READ