spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'நீங்க நெனச்ச த்ரிஷா இல்ல..இந்த படம் வேற மாறி..' ராங்கி பட விழாவில் த்ரிஷா பேச்சு

‘நீங்க நெனச்ச த்ரிஷா இல்ல..இந்த படம் வேற மாறி..’ ராங்கி பட விழாவில் த்ரிஷா பேச்சு

-

- Advertisement -

லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில்,இயக்குனர் சரவணன் இயக்கத்தில், நடிகை த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள “ராங்கி” திரைப்படம் டிசம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது.

ராங்கி படத்தின் நிகழ்ச்சியில் த்ரிஷா சொன்ன முக்கிய தகவல்!

we-r-hiring

இந்நிலையில் “ராங்கி” படக்குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் படத்தின் நாயகி த்ரிஷா, இய்குனர் சரவணன்,இசையமைப்பாளர் சத்யா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர்களிடம் பேசிய நடிகை த்ரிஷா, “படத்தின் முக்கியத்துவம் கருதி எந்த ஒரு சமரசாமின்றி இரண்டு முறை உஸ்பெகீஸ்தான் சென்று படப்பிடிப்பை நடத்தினோம். படத்திற்காக இரண்டு வருடம் காத்திருந்தோம். கொரோனா காலகட்டமாக இருந்தது. ஆனால் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு நடிகையாக என்னுடைய பணி முடிந்ததும், நான் கிளம்பிவிடுவேன். ஆனால் எனக்கு அடுத்து படத்தின் தொழில்நுட்ப குழுவினர் தான் முக்கியம் எடிட்டிங்,கேமரா,இசை இது தான் இந்த crew தான் என்னை பொறுத்தவரை முக்கியம். ராங்கி ஒரு Super Women படம் கிடையாது, ரொம்ப ரியலாக எடுக்கப்பட்ட படம் அருமையாக வந்துள்ளது. உஸ்பெகிஸ்தானில் படப்பிடிப்பை நடத்தியது புதிய அனுபவமாக இருந்தது. அந்நாட்டின் ராணுவத்தினர் தான் எங்களுக்கு துப்பாக்கியை வழங்கினர். அது அனைத்தும் உண்மையான துப்பாக்கியை வைத்து எடுக்கப்பட்டது.

என்னுடன் நடித்த, பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இது நாயகியை சார்ந்த படமாக இருந்தாலும் அது ஒரு ‘Tag’. எல்லாத்தையும் தாண்டி ரடிகர்கள் கையில் தான் படம் உள்ளது,படத்தை பார்த்து நீங்கள் தான் சொல்ல வேண்டும்” என்றார்.

MUST READ