spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதனுஷ் நடிக்கும் ராயன்... ஜூனில் வெளியாகும் என அறிவிப்பு...

தனுஷ் நடிக்கும் ராயன்… ஜூனில் வெளியாகும் என அறிவிப்பு…

-

- Advertisement -
தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ராயன் திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2017-ம் ஆண்டு வெளியான பவர் பாண்டி திரைப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தவர் நடிகர் தனுஷ். ஒரு நடிகராக தன்னை முன்னிறுத்திக் கொண்ட நடிகர் தனுஷ் தென்னிந்திய மொழிகள் மட்டுமன்றி பாலிவுட், ஹாலிவுட்டிலும் தடம் பதித்து விட்டார். நடிப்பைத் தாண்டி தற்போது இயக்கத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் இயக்கிய முதல் திரைப்படம் பவர் பாண்டி. இதில் ராஜ்கிரண், பிரசாந்த் ஆகியோருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். படம் வரவேற்பை பெற்றது.

we-r-hiring
இதைத் தொடர்ந்து திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் படத்தில் அடுத்தடுத்து நடித்தார் தனுஷ். தற்போது அவரின் 50-வது திரைப்படமான ராயன் படத்தை அவரே இயக்கி நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் தனுஷூடன் இணைந்து காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ்ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

இத்திரைப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ராயன் திரைப்படத்தின் மாஸான அப்டேட்டை படக்குழு வெளியிட்டது. அதன்படி, ராயன் திரைப்படம் வரும் ஜூன் மாதம் திரைக்கு வரும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், படத்திலிருந்து முதல் பாடல் வரும் 9-ம் தேதி வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளது.

MUST READ