ராயன் படத்திலிருந்து புதிய பாடல் ரிலீஸ்… இணையத்தில் வைரல்…
- Advertisement -
ராயன் திரைப்படத்திலிருந்து வாட்டர் பாக்கெட் எனத் தொடங்கும் பாடல் வௌியாகி உள்ளது.

நடிப்பு, இயக்கம், பாடல் ஆசிரியர், பாடகர் என பன்முகத் தன்மை கொண்ட நட்சத்திரம் தனுஷ். தொடக்கத்தில் தோல்வி மற்றும் விமர்சனங்களை மட்டுமே சந்தித்து வந்த தனுஷ், இன்று சினிமா எனும் கோட்டையில் வெற்றி நாயகனாக உருவெடுத்துள்ளார். கோலிவுட்டில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்ற தனுஷ், தன் கவனத்தை இயக்கம் பக்கம் திருப்பினார். அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு பா பாண்டி என்ற திரைப்படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப் படங்களில் கமிட்டாகி நடித்து வரும் தனுஷ், தற்போது இயக்கத்தில் அதிக கவனமும், நேரமும் செலவழித்து வருகிறார். அதன்படி, தனுஷ் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் தான் ராயன். இது தனுஷின் 50-வது படமாகும். இதில் தனுஷுடன் இணைந்து சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ராயன் திரைப்படத்திலிருந்து வாட்டர் பாக்கெட் எனத் தொடங்கும் பாடல் வௌியாகி உள்ளது. இப்பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.