நடிகை ராதிகா சினிமாவில் மீண்டும் கதாநாயகியாக களமிறங்குகிறார்.
தமிழ் சினிமாவின் 80-களில் ஸ்டார் நடிகையாக வலம் வந்தவர் ராதிகா. ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் ராதிகா.

அதையடுத்து படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களின் நடிக்க தொடங்கிய ராதிகா சீரியலில் களமிறங்கி இல்லத்தரசிகளின் மனங்களை வென்றார். சீரியலில் நடித்த பிறகும் கூட மறுபடியும் சினிமாவில் ராதிகாவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தற்போதும் படங்களில் பல சிறப்புகளை பாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.
இந்நிலையில் ராதிகா மீண்டும் ஒரு புதிய படத்தில் கதாநாயகியாக களமிறங்குகிறார். நயன்தாரா நடிப்பில் வெளியான அறம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பெயர் பெற்றவர் கோபி நயினார்.
தற்போது அவர் மனுஷி என்ற படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தை அடுத்து ராதிகா நடிக்கும் புதிய படத்தை கோபி நயினார் இயக்க உள்ளார். இந்த படத்தில் மலையாள நடிகர் லால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் முதல் கட்ட பணிகள் நடந்து வருகின்றன. படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.