சந்திரமுகி 2 படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு உள்ளிட்டோரின் நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இதன் வெற்றிக்கு பிறகு 17 ஆண்டுகள் கழித்து சந்திரமுகி இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய பி வாசு தான் இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார்.
சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், ராதிகா லட்சுமிமேனன் வடிவேலு மற்றும் பலர் நடித்துள்ளனர். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் பாகுபலி மற்றும் ஆர் ஆர் படத்திற்கு இசையமைத்த எம் எம் கீரவாணி இசையமைத்துள்ளார்.
மும்பை மைசூர் உள்ள பகுதிகளில் பிரம்மாண்டமான அரண்மனையில் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு படமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
மேலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி உள்ள சந்திரமுகி 2 திரைப்படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் இந்த படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.