பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. மேலும் இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர் மற்றும் டான்ஸ் மாஸ்டரும் ஆவார்.
இவர் பல காலங்களாக ஆதரவற்றவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தனிப்பட்ட முறையில் உதவி செய்து வருகிறார். அந்த வகையில் இவர் நடத்தி வரும் அறக்கட்டளைக்கு பிரபலங்கள் பலரும் உதவி செய்து வருகின்றனர்.
Hi Friends & Fans, This is my small request for you all. Watch this Video👇🏻#service is God 🙏🙏 pic.twitter.com/QB24RL8oNt
— Raghava Lawrence (@offl_Lawrence) August 29, 2023

இந்நிலையில் திடீரென்று தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எனது டிரஸ்ட் இருக்கு யாரும் பணம் அனுப்பாதீர்கள். என்னுடைய குழந்தைகளை நானே பார்த்துக்கொள்கிறேன். நான் டான்ஸ் மாஸ்டராக இருக்கும்போதே 60 குழந்தைகளை பார்த்துக் கொண்டேன். மாற்றுத்திறனாளிகளுக்கு டான்ஸ் சொல்லித் தருவது, ஓபன் ஹார்ட் சர்ஜரிக்கு உதவுவது என்று பல உதவிகளை செய்து வந்தேன். அந்த சமயங்களில் என்னால் அவ்வளவு பெரிய உதவிகளை செய்ய முடியாது. அதனால் மற்றவர்களிடம் உதவி கேட்டிருந்தேன். ஆனால் தற்போது ஒரு வருடத்திற்கு மூன்று படங்களில் நடிக்கிறேன். நல்ல வருமானம் வருகிறது. அதனால் பணம் நன்றாக கிடைக்கிறது பின்பு ஏன் மற்றவர்களிடம் உதவி கேட்கிறாய் என்று எனக்குள் ஒரு கேள்வி எழுகிறது. நான் ஆணவமாக பணம் கொடுக்க வேண்டாம் என்று கூறவில்லை. எனக்கு கொடுக்கின்ற பணத்தை உங்கள் வீட்டின் அருகில் இருப்பவர்களுக்கு, கஷ்டப்படுகிறவர்களுக்கு கொடுத்து உதவுங்கள். என்னுடன் இணைந்து பலரும் உதவி செய்ய நினைக்கிறீர்கள். எனக்கு அது மகிழ்ச்சி தான். கஷ்டப்படுகின்றவர்களை நானே காட்டுகிறேன் உங்களின் கையால் அவர்களுக்கு உதவி செய்யுங்கள். அதுதான் சந்தோஷமாக இருக்கும்” என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.