Homeசெய்திகள்சினிமாராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் 'காஞ்சனா 4' ..... படப்பிடிப்பு குறித்த தகவல்!

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் ‘காஞ்சனா 4’ ….. படப்பிடிப்பு குறித்த தகவல்!

-

- Advertisement -

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா 4 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் 'காஞ்சனா 4' ..... படப்பிடிப்பு குறித்த தகவல்!

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். அந்த வகையில் இவர் தற்போது பென்ஸ், கால பைரவா, ஹண்டர் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர் முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 ஆகிய காமெடி கலந்த ஹாரர் படங்களை இயக்கி ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளார். அடுத்தது இவர், காஞ்சனா 4 திரைப்படத்தை தயாரித்து, இயக்கி, நடிக்கப் போகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே வெளியானது. அதே சமயம் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதமே தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் இதுவரை படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் 'காஞ்சனா 4' ..... படப்பிடிப்பு குறித்த தகவல்!இதற்கிடையில் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடிகை பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் என செய்திகள் வெளியானது. இந்நிலையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தொடங்கும் என லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது.

எனவே நடிகை பூஜா ஹெக்டே, சூர்யா 44 படத்தை முடித்த பிறகு தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பின்னர் காஞ்சனா 4 படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ