இந்திய சினிமாவில் திரைத்துறையினரை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவில் தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளின் அடிப்படையில் திரை உலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது 69 ஆவது தேசிய விருது வழங்கும் விழா புதுடெல்லியில் நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தேசிய விருது பெற்றவர்களின் பட்டியலை அறிவித்தார்.
அதில், கடந்த 2022 ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம் இந்திய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்த படம் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் உருவாகியிருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த படம் பல தேசிய விருதுகளை அள்ளியுள்ளது. சிறந்த நடனம், சிறந்த சண்டை பயிற்சி, சிறந்த பாடலாசிரியர், சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளது. மேலும் இந்தப் படத்திற்கான சிறந்த இசையமைப்பாளர் விருது எம் எம் கீரவாணிக்கும் சிறந்த பாடகருக்கான விருது கால பைரவாவிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் ஆர் ஆர் திரைப்படம் பெற்றுள்ளது.