Homeசெய்திகள்சினிமாரஜினி, மாரி செல்வராஜ் கூட்டணியிலான புதிய படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

ரஜினி, மாரி செல்வராஜ் கூட்டணியிலான புதிய படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

இயக்குனர் மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ஆவார். ரஜினி, மாரி செல்வராஜ் கூட்டணியிலான புதிய படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்து மாரி செல்வராஜுக்கு பெயரையும் புகழையும் பெற்று தந்துள்ளது. இதைத்தொடர்ந்து மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் மாரி செல்வராஜ் கார்த்தி நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாகவும், விஜய் சேதுபதி நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் மாரி செல்வராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதன்படி இந்த படமானது ரஜினியின் 173-வது படமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
ரஜினி, மாரி செல்வராஜ் கூட்டணியிலான புதிய படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!இந்நிலையில் மாரி செல்வராஜ் மற்றும் ரஜினி கூட்டணியில் உருவாகும் புதிய படம் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இவர்களின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தினை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2026 ஆம் ஆண்டு வெளியாகும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது தொடர்பான மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ