Homeசெய்திகள்சினிமா'மாவீரன்' படம் பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்...... நெகிழ்ச்சியடைந்த சிவகார்த்திகேயன்!

‘மாவீரன்’ படம் பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்…… நெகிழ்ச்சியடைந்த சிவகார்த்திகேயன்!

-

மாவீரன் படம் பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் மாவீரன். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார் வில்லனாக மிஷ்கின் நடித்துள்ளார். இவர்களுடன் சரிதா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் கடந்த ஜூன் 14ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி ரசிகர்களிட்டையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் இது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில்
வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ” மாவீரன் திரைப்படம் 25 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த அளவிற்கு பாக்ஸ் ஆபீஸ் வெற்றியும் பாராட்டுக்களையும் கொடுத்த மிகப்பெரிய நன்றி. எல்லா பார்வையாளர்களுக்கும், மீடியாக்களுக்கும், எனது நன்றி குறிப்பாக எனது சகோதர சகோதரிகளுக்கு நன்றி.
இந்த வீடியோவை இன்னொரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்து கொள்வதற்காக தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் மாவீரன் படம் பார்த்துவிட்டு போன் மூலம் தொடர்பு கொண்டு என்னையும் எனது படக்குழுவினரையும் வாழ்த்தினார். மாவீரன் வித்தியாசமான கதையாக இருக்கிறது என்று வாழ்த்தினார். ஜெயிலர் இசை வெளியீட்டு விழா, போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட பணிகளுக்கு நடுவில் நேரம் ஒதுக்கி எனக்கு கால் செய்து எங்கள் எல்லாரையும் வாழ்த்தினார். தலைவா யு ஆர் ஆல்வேஸ் கிரேட். தலைவா உங்களுடைய மிகப் பெரிய ரசிகன் நான் உங்களுக்கு பேனர் வைத்து உங்கள் சினிமாக்களை கொண்டாடியவன் நான். அப்படி இருக்கு என்ற ஒருவனை எங்கள் பாராட்டியது வாழ்நாள் சாதனையாக நினைக்கிறேன். இதே சந்தோஷத்தில் நாளை வெளியாக போகும் ஜெயிலர் திரைப்படம் ஒரு மெகா பிளாக்பஸ்டர் திரைப்படமாக நிச்சயமாக இருக்கும். நாளை ரஜினியின் சரித்திரத்தில் இன்னும் சிறப்பான நாளாக இருக்கும். தலைவா உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்” என்று நெகிழ்ச்சியான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

MUST READ