spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'ஜெயிலர் 2' ரிலீஸ் அப்டேட் கொடுத்த ரஜினி!

‘ஜெயிலர் 2’ ரிலீஸ் அப்டேட் கொடுத்த ரஜினி!

-

- Advertisement -

நடிகர் ரஜினி, ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை கொடுத்துள்ளார்.'ஜெயிலர் 2' ரிலீஸ் அப்டேட் கொடுத்த ரஜினி!சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜெயிலர் திரைப்படம் வெளியானது. நெல்சனின் இயக்கத்திலும், அனிருத்தின் இசையிலும் வெளியான இந்த படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து நெல்சன் – ரஜினி -அனிருத் காம்போவில் ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறது.'ஜெயிலர் 2' ரிலீஸ் அப்டேட் கொடுத்த ரஜினி! இதில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இது தவிர மோகன்லால், சிவராஜ்குமார், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில் நடிப்பதாக பேச்சு அடிபடுகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. பின்னர் ‘கூலி’ படத்திற்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நாளை (செப்டம்பர் 18) பாலக்காடு பகுதியில் தொடங்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

இதற்காக நடிகர் ரஜினி இன்று (செப்டம்பர் 17) சென்னையில் இருந்து கேரளா சென்றுள்ளார். அப்போது கேரளா விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, ‘ஜெயிலர் 2’ படம் தொடர்பாக பேசியுள்ளார். அதன்படி அவர், “ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்காக வந்துள்ளேன். 6 நாட்கள் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு மேல் திரைக்கு வரும்” என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

MUST READ