spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபொங்கல் பந்தயத்திலிருந்து விலகிய லால் சலாம்... ரிலீஸ் தேதி வெளியீடு...

பொங்கல் பந்தயத்திலிருந்து விலகிய லால் சலாம்… ரிலீஸ் தேதி வெளியீடு…

-

- Advertisement -
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் லால் சலாம்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

இந்திய திரையுலகம் சாம்ராஜ்ஜியத்தின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வௌியான திரைப்படம் ஜெயிலர். வசந்த் ரவி, தமன்னா, சுனில், சிவராஜ்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படம் சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்துள்ள படம் லால் சலாம்.

we-r-hiring
ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்ளில் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்க, கிரிக்கெட் நட்சத்திரம் கபில் தேவ் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு மும்பை, சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை, உள்ளிட்ட பகுதிகளில் நடந்து முடிந்தது. படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. அதன்படி வரும் பிப்ரவரி மாதம் 9-ம் தேதி லால் சலாம் படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

MUST READ