Homeசெய்திகள்சினிமாஅசாத்தியமான மன உறுதி உள்ள மனிதர்.... விஜயகாந்த் குறித்து ரஜினி!

அசாத்தியமான மன உறுதி உள்ள மனிதர்…. விஜயகாந்த் குறித்து ரஜினி!

-

- Advertisement -

அசாத்தியமான மன உறுதி உள்ள மனிதர்.... விஜயகாந்த் குறித்து ரஜினி!விஜயகாந்த் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு நேற்று மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். விஜயகாந்தின் மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள் திரைப்பட பிரபலங்கள் என பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் இன்று காலை 6:00 மணி முதல் தீவு திடலில் இறுதி அஞ்சலிக்காக விஜய்காந்தின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் விஜயகாந்த்திற்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று நாகர்கோவில் படப்பிடிப்பிலிருந்து சென்னை திரும்பியனார் ரஜினி. தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினி, “அருமை நண்பர் விஜயகாந்த் மிகப்பெரிய துர் அதிர்ஷ்டம். அசாத்தியமான மன உறுதி உள்ள மனிதர் விஜயகாந்த். எப்படியும் உடல்நிலை தேறி வருவார் என்று நினைத்தோம். ஆனால் சமீபத்தில் நடந்த பொது குழு கூட்டத்தில் அவரின் நிலைமையை கண்டு என் நம்பிக்கை இழந்தது. விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசின் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார் தமிழ் மக்களுக்கு நிறைய நல்லது செய்திருப்பார். தமிழ் மக்கள் அந்த பாக்கியத்தை இழந்துவிட்டோம். அவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்” என்று பேசியுள்ளார்.அசாத்தியமான மன உறுதி உள்ள மனிதர்.... விஜயகாந்த் குறித்து ரஜினி!

we-r-hiring

1980 கால கட்டங்களில் ரஜினி, கமல் ஆகியோருக்கு இணையாக பல்வேறு வெற்றி படங்களை கொடுத்தவர் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ