Homeசெய்திகள்சினிமாரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2' .... மாஸ் ரோலில் நடிக்கும் பாலய்யா!

ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர் 2’ …. மாஸ் ரோலில் நடிக்கும் பாலய்யா!

-

- Advertisement -

ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2' .... மாஸ் ரோலில் நடிக்கும் பாலய்யா!

ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜெயிலர் திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் ரஜினி மாஸ் காட்சிகளில் மிரட்டி இருந்தார். அதேபோல் மோகன்லால், சிவராஜ்குமாருக்கும் மாஸ் காட்சிகளை வைத்து அசத்தியிருந்தார். ஆதலால் தற்போது உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படத்திலும் மோகன்லால், சிவராஜ்குமார் நடிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதன்படி மோகன்லால், சிவராஜ்குமார் இருவரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2' .... மாஸ் ரோலில் நடிக்கும் பாலய்யா!இதற்கிடையில் ஜெயிலர் 2 திரைப்படம் தொடங்குவதற்கு முன்பாகவே பாலய்யா இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிப்பார் என பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. அதன்படி நெல்சன், ஜெயிலர் 2 படத்தில் கேமியா ரோலில் நடிக்க பாலய்யாவை அணுகியுள்ளார். ஆனால் பாலய்யா, இன்னும் முக்கியமான வேடத்தில் நடிக்க ஆர்வம் காட்டினாராம். அதன்படி தற்போது நெல்சன், ஜெயிலர் 2 படத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் 8 முதல் 10 நிமிடங்கள் இடம்பெறும் கேமியா ரோலை பாலய்யாவிற்காக உருவாகி இருக்கிறார் என்று புதிய தகவல்களை வந்துள்ளது. அதாவது இந்த படத்தில் பாலய்யாவின் கதாபாத்திரம் போலீஸ் கதாபாத்திரமாக இருக்கலாம் என்றும் ஒரு பேச்சு அடிபடுகிறது. இருப்பினும் பாலய்யாவின் அந்த ரோல் எப்படி இருக்கப்போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2' .... மாஸ் ரோலில் நடிக்கும் பாலய்யா!

மேலும் ஜெயிலர் 2 படத்தில் ரஜினியுடன் இணைந்து முதல் பாகத்தில் நடித்திருந்த ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா மேனன் ஆகியோரும் நடித்து வருகின்றனர். இது தவிர எஸ்.ஜே. சூர்யா, பஹத் பாசில், சுராஜ், செம்பன் வினோத் ஆகியோரும் இப்படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ