சந்திரமுகி 2 பட குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்தி உள்ளார்.
கடந்த 2005-ல் ரஜினி நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு 17 வருடங்கள் கழித்து சந்திரமுகி இரண்டாம் பாகத்தை பி வாசு இயக்கியுள்ளார். இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, மகிமா நம்பியார், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் பலர் நடித்திருந்தனர். கங்கனா ரனாவத் இதில் ஒரிஜினல் சந்திரமுகியாக நடித்திருந்தார். லைகா நிறுவனத்தின் தயாரிப்பிலும் எம் எம் கீரவாணியின் இசையிலும் இப்படம் உருவானது. இந்த படம் நேற்று தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
A surprise love note 🕴🏻 from Thalaivar @rajinikanth ✍🏻❤️ We are honored by your praise for #Chandramukhi2 🙏🏻🥳 Thank you Thalaivar! 🤝#PVasu @offl_Lawrence @KanganaTeam @mmkeeravaani @RDRajasekar #ThottaTharani @editoranthony #NVPrasad @SriLakshmiMovie @GokulamMovies @film_dn_… pic.twitter.com/KS8NuW5zBK
— Lyca Productions (@LycaProductions) September 29, 2023
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், “மிகப்பெரிய வெற்றி படமான தன்னுடைய சந்திரமுகியை….. புதிதாக வேறு ஒரு கோணத்தில் ஒரு பிரம்மாண்ட பொழுதுபோக்கு படமாக சினிமா ரசிகர்களுக்கு தந்திருக்கும் நண்பர் திருவாசு அவர்களுக்கும்… அருமையாக நடித்திருக்கும் தம்பி ராகவா லாரன்ஸ் அவர்களுக்கும்…. மற்றும் பட குழுவினர் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள்” என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை லைக்கா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தலைவர் என்று குறிப்பிட்டு வெளியிட்டுள்ளது.