Homeசெய்திகள்சினிமாமீண்டும் ஆன்மிக பயணம்... இமயமலை புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த்...

மீண்டும் ஆன்மிக பயணம்… இமயமலை புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த்…

-

- Advertisement -
ஆண்டுதோறும் இமயமலைக்கு ஆன்மிக பயணம் செல்லும் நடிகர் ரஜினிகாந்த், தற்போது ஒரு வார கால பயணமாக இமயமலைக்கு புறப்பட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஜெயிலர் திரைப்படம் தான் அவரது இறுதித்திரைப்படம் என்று கூறப்பட்ட நிலையில், ரஜினி தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். அவர் தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. மேலும், அனிருத் படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். மேலும், படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங், ஃபகத் பாசில், ராணா டகுபதி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஆந்திரா, மும்பை, புதுச்சேரி, சென்னை, நெல்லை, கேரளா என பல இடங்களில் வேட்டையன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. படக்குழு இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ஓய்வெடுக்க அபுதாபி புறப்பட்டுச் சென்றார். அங்கு 11 நாட்கள் ஓய்வெடுத்த அவருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது.

இதையடுத்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த், உடனடியாக ஒரு வார கால பயணமாக இமயமலை புறப்பட்டுச் சென்றார். ஆண்டுதோறும் ஆன்மிக பயணத்திற்கு புறப்பட்டுச் செல்லும் ரஜினி, நடப்பாண்டும் ஆன்மிக பயணத்திற்கு புறப்பட்டு விட்டார். பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளார்.

MUST READ