spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரஜினியின் 170-வது படம் குறித்த அறிவிப்பு

ரஜினியின் 170-வது படம் குறித்த அறிவிப்பு

-

- Advertisement -

ரஜினியின் 170-வது படம் குறித்த அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்தின் 170-வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் படத்தில் நடிக்கும் ரஜினி

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து வரும் 169-வது திரைப்படம் ‘ஜெயிலர்‘. டாக்டர் , பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்குகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஒரு வருடமாக சென்னை, ஐதராபாத், ராஜஸ்தான் என பல்வேறு இடங்களில், பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

we-r-hiring

லைகா தயாரிப்பில், ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் ரஜினி

இந்நிலையில், ரஜினி நடிக்கும் 170-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. சூர்யாவை வைத்து ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல், ரஜினிகாந்த்தின் 170-வது படத்தை இயக்குகிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கவுள்ளார். 2024-ம் ஆண்டு இப்படம் திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

MUST READ