spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரஜினிகாந்திற்கு கோல்டன் விசா... கௌரவப்படுத்திய அபுதாபி...

ரஜினிகாந்திற்கு கோல்டன் விசா… கௌரவப்படுத்திய அபுதாபி…

-

- Advertisement -
ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் ரஜினி நடிக்கும் 170-வதுபடமாகும். இத்திரைப்படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கி புகழ்பெற்ற ஞானவேல் இயக்குகிறார். லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் படத்திற்கு இசை அமைக்கிறார். வேட்டையன் படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங், உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அண்மையில் இப்படத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைவு பெற்றன. இதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ஓய்வெடுக்க அபுதாபி புறப்பட்டுச் சென்றார். அபுதாபி சென்ற ரஜினிகாந்த், அங்கு லுலு குழுமத் தலைவரும், தொழில் அதிபருமான எம்.ஏ.யூசூப் என்பவரை சந்தித்துப் பேசினார். யூசுப்புடன், ரோல்ஸ் ராய்ஸ் காரில் ரஜினிகாந்த் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

https://x.com/i/status/1793897327968887295

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு கோல்டன் விசா வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ரஜினிக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதை ரஜினிகாந்தும் வீடியோமூலம் தெரிவித்துள்ளார்.

MUST READ