spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபுதிய கட்சி தொடங்கிய விஜய்க்கு வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்

புதிய கட்சி தொடங்கிய விஜய்க்கு வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்

-

- Advertisement -
கோலிவுட் எனும் கோட்டையில் இரு பெரும் ஆளுமைகள், நடிகர் விஜய் மற்றும் நடிகர் ரஜினிகாந்த். இருவருக்கும் இரு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு ஹிட் படங்களை கொடுப்பதில் இருவருமே தவறுவது இல்லை. அண்மைக் காலமாக சமூக வலைதளங்களில் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் மோதல் போக்கு நிலவி வருகிறது. ஜெயிலர் பட விழாவில் விஜய்யை விமர்சிக்கும் விதமாக ரஜினி பேச, லியோ பட வெற்றி விழாவில் அதற்ககு பதில் கொடுக்கும் விதமாக விஜய் பேச இருவரின் காக்கா, கழுகு சண்டை தொடர்ந்து கொண்டே சென்றது.

இதனிடையே நடிகர் விஜய் புதிய கட்சியை தொடங்கி இருக்கிறார். கடந்த சில நாட்களாகவே அவர் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து அண்மையில் புதிய கட்சியை தொடங்கி, அதற்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த அறிவிப்பு விஜய் மக்கள் இயக்கத்தினர், விஜய் ரசிகர்கள், தமிழகம் முழுவதும் பெரும் உற்சாகத்தை  ஏற்படுத்தியது. தற்போது தி கோட் திரைப்படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்து தனது 69-வது படத்தில் நடிக்க உள்ளார்.

விஜய் நடிக்கும் 69-வது திரைப்படம் தான் அவரது திரைவாழ்வில் இறுதிப்படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால், ரசிகர்கள் ஒரு பக்கம் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், சென்னை விமான நிலையம் சென்ற ரஜினிகாந்திடம், விஜய் கட்சி தொடங்கியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ரஜினி, கட்சி தொடங்கிய விஜய்க்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்,

MUST READ