- Advertisement -
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் வேட்டையன் திரைப்படம் பீரியட் படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். தமிழ் திரையுலகம் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என ஒட்டுமொத்த திரையுலகிலும் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நாயகன் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் கடந்த ஆண்டு வௌியாகி சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.
