- Advertisement -
லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற இருக்கும் நிலையில், கல்லூரியில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும், இயக்குநரும் ஆவார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனுஷை வைத்து 3 திரைப்படத்தை இயக்கி திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்திருப்பார். இப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் அனிருத்தும் அறிமுகமானார். முதல் படத்திலேயே வித்தியாசமான கதைக்களத்தை உருவாக்கி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். இதைத் தொடர்ந்து வை ராஜா வை படத்தை இயக்கினார். இப்படத்தில் கௌதம் கார்த்திக், பிரியங்கா மோகன், விவேக், டாப்ஸி ஆகியோர் நடித்திருந்தனர்.


தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் திரைப்படம் லால் சலாம். இப்படத்தில் விஷ்ணு விஷால், வித்தார்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் மற்றும் பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் கபில் தேவ் ஆகியோர் கௌரவ வேடத்தில் நடித்துள்ளனர். நிரோஷா ராதாவும் ரஜினிகாந்திற்கு மனைவியாக நடித்திருக்கிறார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றன



