- Advertisement -
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷின் 3, மற்றும் கௌதம் கார்த்திக்கின் வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து தற்போது விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் கூட்டணியில் லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் வரும் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அனிமேஷன் பாணியில் இத்திரைப்படம் வெளியானது. ஆனால், படம் எதிர்பார்த்த் வெற்றி பெறவில்லை. இதைத் தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து புதிய வெப் சீரிஸ் ஒன்றை இயக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பாகவே செய்திகள் வெளியாகி வந்தது. அதன்படி அமேசான் பிரைம் நிறுவனத்திற்காக வெப் சீரிஸ் ஒன்றை தயாரித்து வருகிறார். இதில் அசோக் செல்வன் நடிக்கிறார். நோவா ஆபிரகாம் இந்த படத்தை இயக்குகிறார்.




