ரஜினிகாந்த், நெல்சன் திலீப் குமார் கூட்டணியில் ஜெயிலர் திரைப்படம் உருவாகியுள்ளது. நெல்சன் திலிப் குமாரின் பீஸ்ட் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பதால் ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரஜினி இப்படத்தில் ஓய்வு பெற்ற ஜெயலராக நடித்துள்ளார் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் காவாலா எனும் முதல் பாடல் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இரண்டாம் பாடல் வருகின்ற 17ஆம் தேதி ரிலீசாக உள்ளது. மேலும் ஜெயிலர் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையிடப்பட இருக்கிறது.
தற்போது இந்த படத்தின் ‘ Hukum பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலை சூப்பர் சுப்பு எழுதியுள்ள நிலையில் அனிருத் பாடியுள்ளார். முழுக்க முழுக்க இந்த பாடல் ஆக்ஷன் நிறைந்த மாஸான பாடலாக உருவாகியுள்ளது. இந்தப் பாடலின் மூலம் படத்தில் வெறித்தனமான மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Thala mudhal adi vara, Thalaivaru alapparai!💥 Time to rage to #Hukum!
▶ https://t.co/9yGcdija5a@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @soupersubu #Jailer #JailerSecondSingl
— Sun Pictures (@sunpictures) July 17, 2023
இந்தப் பாடலில், நிலவரம் புரியுதா உட்காருடா… தலைவர் களத்துல சூப்பர் ஸ்டாருடா …..தலை முதல் அடி வரை தலைவரு அலப்பறை……போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.இதன் மூலம் இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மேலும் காத்திருக்கும் ரசிகர்களுக்கு நல்ல ஒரு விருந்தாக அமையும் என்றும் திரையரங்கமே சரவெடியாய் வெடிக்க போகிறது என்றும் கூறப்படுகிறது.