spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா90s கிட்ஸ்-ன் காதல்.....ரக்ஷன் நடிக்கும் 'மறக்குமா நெஞ்சம்' டீசர் ரிலீஸ்...!

90s கிட்ஸ்-ன் காதல்…..ரக்ஷன் நடிக்கும் ‘மறக்குமா நெஞ்சம்’ டீசர் ரிலீஸ்…!

-

- Advertisement -

ரக்ஷன் நடிக்கும் ‘மறக்குமா நெஞ்சம்’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

90s கிட்ஸ்-ன் காதல்.....ரக்ஷன் நடிக்கும் 'மறக்குமா நெஞ்சம்' டீசர் ரிலீஸ்...!சின்னத்திரை வர்ணனையாளராக இருந்து வெள்ளித்திரைகள் நடிகராக மாறியவர் ரக்ஷன். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரக்ஷன் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமானவர். தற்போது ஹீரோவாக ‘மறக்குமா நெஞ்சம்’ படத்தில் நடித்துள்ளார். அதே சமயம் ரஜினியின் வேட்டையன் படத்திலும் நடித்து வருகிறார். 90ஸ் கிட்ஸின் பள்ளிப்பருவ காலத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. பள்ளி படிக்கும் பருவத்தில் உண்டாகும் காதல், பிரிவின் வலி, நட்பு என பீல் குட் படமாக இப்படம் இருக்கும் என்பது டீசரை பார்க்கும் பொழுது தெரிகிறது. படத்தின் கதைக்கு ஏற்றவாறு காட்சிகளும் அழகாக படமாக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிகிறது.

we-r-hiring

இதில் ரக்சன் உடன் இணைந்து மலினா, தீனா, முனிஷ்காந்த், ப்ராங்க்டர் ராகுல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை யோகேந்திரன் எழுதி இயக்கியுள்ளார். இதனை ஃபிலியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் குவியம் மீடியா ஒர்க்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் கோபி துரைசாமியின் ஒளிப்பதிவிலும் சச்சின் வாரியரின் இசையமைப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் இப்படம் வருகின்ற பிப்ரவரி இரண்டாம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கு முன்னதாக படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ